/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூங்காக்கள் பராமரிப்பு பணி தனியாரிடம் அளிக்க எதிர்ப்பு பணிகள் பாதிப்பு
/
பூங்காக்கள் பராமரிப்பு பணி தனியாரிடம் அளிக்க எதிர்ப்பு பணிகள் பாதிப்பு
பூங்காக்கள் பராமரிப்பு பணி தனியாரிடம் அளிக்க எதிர்ப்பு பணிகள் பாதிப்பு
பூங்காக்கள் பராமரிப்பு பணி தனியாரிடம் அளிக்க எதிர்ப்பு பணிகள் பாதிப்பு
ADDED : டிச 23, 2024 01:13 AM

சென்னை:சென்னை மாநகராட்சியில் 871 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு அரசு திட்டங்களின் வாயிலாக புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன.
அனைத்து பூங்காக்களையும் மாநகராட்சி வாயிலாக பராமரித்தால், பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, 89 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும்; 168 பூங்காக்கள் மாநகராட்சி பணியாளர்கள் வாயிலாகவும் பராமரிக்கப்படுகின்றன.
மீதமுள்ள, 595 பூங்காக்கள் அ.தி.மு.க., ஆட்சியில் தனியார் ஒப்பந்தத்தில் விடப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்கு பின், ஒப்பந்ததாரருக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் ஒப்பந்த காலம் முடிவடைந்தது.
தற்போது, ஓராண்டு பராமரிப்பு அடிப்படையில், மண்டல வாரியாக பூங்காக்களை ஒப்பந்தம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், தனியாரிடம் அளிக்க உள்ள மாநகராட்சியின் முடிவிற்கு, கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், 595 பூங்காக்களில் ஏற்கனவே தனியார் ஒப்பந்தத்தில் பணியாற்றிய காவலர்கள் தான் பெரும்பாலும் பாதுகாவலராக தற்போதும் உள்ளனர். ஆனால், அவர்களுக்கான மாத ஊதியம் வழங்காமல், வழக்கம்போல் தங்குவதற்கான வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருசில அதிகாரிகள் தங்களது சொந்த பணத்தை, அந்த காவலரின் குடும்ப செலவுக்கு அவ்வப்போது கொடுத்து வருகின்றனர்.
மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் அளிப்பதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனால், பல இடங்களில் பூங்காக்கள் பராமரிப்பின்றி வீணாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பூங்கா பராமரிப்பு பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுகிறது. பூங்கா பராமரிப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. யாருக்காவது வழங்கப்படாமல் இருந்தால், விரைவில் வழங்கப்படும்' என்றனர்.
பூங்கா பராமரிப்பு பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுகிறது. பூங்கா பராமரிப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. யாருக்காவது வழங்கப்படாமல் இருந்தால், விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
- மாநகராட்சி அதிகாரிகள்.