/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு எம்.ஜி.ஆர்., நகரில் போராட்டம்
/
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு எம்.ஜி.ஆர்., நகரில் போராட்டம்
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு எம்.ஜி.ஆர்., நகரில் போராட்டம்
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு எம்.ஜி.ஆர்., நகரில் போராட்டம்
ADDED : பிப் 15, 2025 09:04 PM
எம்.ஜி.ஆர்., நகர்:எம்.ஜி.ஆர்., நகர், பச்சையப்பன் தெருவில் புதிய டாஸ்மாக் கடை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குடியிருப்பு பகுதி என்பதாலும், நெரிசல் மிகுந்த சாலை என்பதாலும், டாஸ்மாக் கடை திறக்க, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதே பகுதியில், 2019, 2021 மற்றும் 2023ம் ஆண்டும் டாஸ்மாக் கடை அமைக்க அரசு முடிவு செய்து, கடை திறக்கும் பணிகளை மேற்கொண்டது.
கடும் எதிர்ப்பு எழுந்ததால் கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடைபெற்று வருவதால், பகுதிவாசிகளுடன் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.