/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது கோயம்பேடு சந்தையில் குப்பையில் ஆரஞ்சு பழங்கள்
/
பொது கோயம்பேடு சந்தையில் குப்பையில் ஆரஞ்சு பழங்கள்
பொது கோயம்பேடு சந்தையில் குப்பையில் ஆரஞ்சு பழங்கள்
பொது கோயம்பேடு சந்தையில் குப்பையில் ஆரஞ்சு பழங்கள்
ADDED : ஏப் 28, 2025 04:10 AM

கோயம்பேடு:கோயம்பேடு பழ அங்காடியில், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 'கமலா ஆரஞ்சு' வரத்து அதிகம் உள்ளது. ஆண்டுதோறும், செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை, ஆரஞ்சு பழ சீசன் இருக்கும்.
தற்போது, ஆரஞ்சு பழ சீசன் முடிந்த நிலையில், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் ஏற்கனவே வாங்கி, குளிர் சேமிப்பு கிடங்கில் வைத்த ஆரஞ்சு பழங்கள், தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இதில், தரமான ஆரஞ்சு பழங்கள், கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அடுத்தகட்ட பழங்கள், 60 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்த பழங்கள், வெயில் தாக்கத்தால் விரைவில் அழுகி விடுகின்றன. இதனால், கோயம்பேடு சந்தையில் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்படுகிறது.