ADDED : ஏப் 13, 2026 10:43 PM

செங்கல்பட்டு: சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்ய குழு அமைத்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மாலதி ஹெ லன் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதியில், 3,070 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.
இந்த ஓட்டுச்சாவடி மையங்களில், மின் விளக்கு, குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார்.
சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், 700 ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மாலதி ஹெ லன், நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், ஓட்டுச்சாவடி மையங்களில் சாய்வு தளங்கள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்ய ப்படா ல் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனால், ஓட்டுச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளையும் செய்து கண்காணிக்க, மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தலைமையில், எட்டு பேர் கொண்ட குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்த குழுவினர், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களி லும், ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
