/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிட் வீச்சால் பார்வை இழந்தவரின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தர உத்தரவு
/
ஆசிட் வீச்சால் பார்வை இழந்தவரின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தர உத்தரவு
ஆசிட் வீச்சால் பார்வை இழந்தவரின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தர உத்தரவு
ஆசிட் வீச்சால் பார்வை இழந்தவரின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தர உத்தரவு
ADDED : ஆக 08, 2025 11:37 AM

செங்குன்றம்: ஆசிட் வீச்சில் பார்வை இழந்த நபரின் மருத்துவ செலவுக்கு, மளிகைக் கடைக்காரர் இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்குன்றம் துரை அப்துல்வஹாப் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் ரங்கநாதன், 55. கடையில், செங்குன்றம் சோலையம்மன் நகரில் வசித்து வரும் வடமாநில வாலிபர் சந்தோஷ், 19 வேலை செய்து வந்தார்.
சம்பள பாக்கி தொடர்பாக, கடந்த மாதம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சந்தோைஷ ஆசிட் பாட்டிலால், ரங்கநாதன் தாக்கியபோது, கடைக்கு பொருள் வாங்க வந்த ஹூமாயூன் பாஷா, 35, என்பவர் மீது ஆசிட் பட்டு, அவரது கண், முகம் மற்றும் கால் பாதித்தது.
செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிந்து, ரங்கநாதனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஆசிட் பட்டு பார்வை இழந்த ஹூமாயூன் பாஷாவுக்கு, மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யும் மருத்துவ செலவுக்கான, இரண்டு லட்சம் ரூபாயை, ரங்நாதன் வழங்க வேண்டும்.
மருத்துவ செலவு தொகை கொடுத்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, ரங்கநாதன் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.