/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைக்காலம் என்றாலும் பணி செய்ய உத்தரவு
/
மழைக்காலம் என்றாலும் பணி செய்ய உத்தரவு
ADDED : அக் 06, 2025 03:00 AM
சென்னை: கீழ்பாக்கத்தில், பொதுப்பணித் துறை வாயிலாக, தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை, அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின், அமைச்சர் வேலு கூறியதாவது:
மழைக்காலம் என்பதற்காக, நாங்கள் பணிகளை நிறுத்துவதில்லை; பணிகளை நிறுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
சென்னை புறநகர் பகுதிகளில், 'பைபாஸ்' சாலைகள் உள்ளதால், இரவும், பகலும் பணிகளை செய்ய முடிகிறது.
போலீசாரின் வாகனங்களுக்கான நேர கட்டுப்பாடுகள் காரணமாகவே, பணிகளில் சற்று தாமதமாகிறது.
மத்திய கைலாஷ் மேம்பாலம் இந்த மாதம் திறக்கப்படும். ஒப்பந்தப்படி, தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பால பணியை முடிக்க, 2026 நவம்பர் வரை அவகாசம் உள்ளது.
இருப்பினும், அதை பொங்கல் பண்டிகைக்குள் முடிக்கும் இலக்குடன், பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.