/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 'திசை'யான திருவொற்றியூர் அ.தி.மு.க.' , தேர்தல் களத்தில் பிற கட்சிகள் மகிழ்ச்சி
/
4 'திசை'யான திருவொற்றியூர் அ.தி.மு.க.' , தேர்தல் களத்தில் பிற கட்சிகள் மகிழ்ச்சி
4 'திசை'யான திருவொற்றியூர் அ.தி.மு.க.' , தேர்தல் களத்தில் பிற கட்சிகள் மகிழ்ச்சி
4 'திசை'யான திருவொற்றியூர் அ.தி.மு.க.' , தேர்தல் களத்தில் பிற கட்சிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 29, 2025 06:47 AM
திருவொற்றியூர்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என திருவொற்றியூர் அ.தி.மு.க., நான்காக பிரிக்கப்பட்டு செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், கோஷ்டி பூசல் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆளுங்கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள், எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் வலம் வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க., அமைப்பு ரீதியாக, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் வருகின்றன. இதில், திருவொற்றியூர் சட்டசபை தொகுதி, மேற்கு - கிழக்கு பகுதிகளாக இருந்தன.
அதன்படி, 1 - 7 மற்றும் 18 - 22 வரையிலான வார்டுகளை உள்ளடக்கிய, திருவொற்றியூர் மேற்கு பகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் பகுதி செயலராக இருந்தார். ஆளுங்கட்சிக்கு எதிராக பல விஷயங்களில் நெருக்கடி கொடுத்து வந்தார்.
அதேபோல 8 - 14 வரையிலான, ஏழு வார்டுகளை உள்ளடக்கிய திருவொற்றியூர் கிழக்கு பகுதிக்கு, பரமசிவம் பகுதி செயலராக இருந்தார்.
இந்நிலையில் தான், திருவொற்றியூர் அ.தி.மு.க., நான்காக பிரிக்கப்பட்டு, திருவொற்றியூர் மண்டலத்தின், 1, 2, 4, 6 ஆகிய வார்டுகளை உள்ளடக்கி, வடக்கு பகுதி உருவாக்கப்பட்டு செயலராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வார்டு, 3, 5, 7, 9, 11 ஆகிய ஐந்து வார்டுகளை உள்ளிடக்கிய மேற்கு பகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் செயலராகவும், 8, 10, 12, 13, 14 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய கிழக்கு பகுதிக்கு பரமசிவம் செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் தொகுதியில் அடங்கிய, மணலி மண்டலத்தின், 18, 20, 21, 22 ஆகிய நான்கு வார்டுகளை உள்ளடக்கி தெற்கு பகுதி உருவாக்கப்பட்டு, சாரதி பார்த்திபன் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க., அமைப்பு ரீதியாக நான்காக பிரிக்கப்பட்டுள்ளதால், கோஷ்டி பூசலால், வரும் சட்டசபை தேர்தலில், எளிதில் வெற்றிப் பெற்று விட முடியும் என, தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகளும் நம்பிக்கையுடன் வலம் வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

