/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பறவைகள் சரணாலயமாகிறது ஓதியூர் ஏரி
/
பறவைகள் சரணாலயமாகிறது ஓதியூர் ஏரி
ADDED : ஜன 04, 2026 05:59 AM

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை, ஓதியூர் ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. நில அளவை பணி சரியாக முடியாததால், அறிவிப்பு தாமதமாகி உள்ளது.
தமிழகத்தில், வனத்துறையின் கட்டுப்பாட்டில், 17 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த சரணாலயங்களின் சூழலியல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சதுப்பு நிலங்கள், அலையாத்தி காடுகள், நீர் நிலைகள் உட்பட, 20 இடங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், இப்பகுதிகள் சர்வதேச கவனத்தை பெறுவதால், புதிய பறவைகள் சரணாலயங்களை அறிவிப்பதற்கான பணிகளை வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் அமைந்துள்ள ஓதியூர் ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.சென்னை பள்ளிக்கரணை, செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதிகளை அடுத்து கிழக்கு கடற்கரை சாலையில், ஓதியூர் ஏரியில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வந்து செல்கின்றன.
இங்கு, ஆண்டு தோறும், 20,000க்கும் மேற்பட்ட பூநாரைகள், 8,000 கொ சு உள்ளான், 7,000 வரை ஊசிவால் வாத்துகள் என, வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. ஆ னால், இப்பகுதி காப்பு காடாக கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பழவே ற்காடு, பள்ளிக்கரணை போன்று உவர் நீர் நாடும் வெளிநாட்டு பறவைகள் ஓதியூர் ஏரிக்கு அதிகம் வருகின்றன. இதை கருத்தில் வைத்து, இப்பகுதியை பறவைகள் சரணாலயமாகவும், ராம்சார் த ளமாகவும் அறிவிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
முதல்படியாக, இங்கு செய்யூர் வனச்சரகம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கு இப்பகுதியின் பரப்பளவு, எல்லைகள் குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
நில அளவை துறையினர், நிலங்களை அளந்து அறிக்கை கொடுத்ததில் சில விபரங்கள் முரண்பட்டதால், மீண்டும் அறிக்கை கோரப்பட்டு ள்ளது.
நில அளவை பணிகள் தெளிவாக முடிக்கப்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

