/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல் திருவேற்காடில் 100க்கும் மேற்பட்டோர் கைது
/
வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல் திருவேற்காடில் 100க்கும் மேற்பட்டோர் கைது
வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல் திருவேற்காடில் 100க்கும் மேற்பட்டோர் கைது
வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியல் திருவேற்காடில் 100க்கும் மேற்பட்டோர் கைது
ADDED : நவ 20, 2024 12:15 AM

திருவேற்காடு, திருவேற்காடு, கோலடி ஏரி, 169 ஏக்கர் பரப்பளவு உடையது. ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பளவு, 112 ஏக்கராக குறைந்துள்ளது. தொடர் புகாரை அடுத்து, அங்கு புதிதாக கட்டப்பட்டு வந்த 26 வீடுகள், அக்., 21ல் வருவாய் துறையால் இடித்து அகற்றப்பட்டன.
கடந்த மாதம் அங்குள்ள வீடுகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. கடந்த 15ம் தேதி, 1,263 வீடுகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில், நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், திருவேற்காடு, செல்லியம்மன் நகரைச் சேர்ந்த கார்பெண்டர் சங்கர், 44, வீட்டிலும், வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். மன உளைச்சலில் இருந்த அவர், 17ம் தேதி இரவு வீட்டில், துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவேற்காடு போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டை இடிப்பதாக நோட்டீஸ் ஒட்டியதாலேயே, கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி பூங்கோதை, 40, புகார் அளித்தார்.
இந்நிலையில், சங்கரின் மரணத்திற்கு நீதி கேட்டும், வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கிய வருவாய்த்துறையை கண்டித்தும், திருவேற்காடு -- அம்பத்துார் சாலையில், கோலடி அன்பு நகர் சந்திப்பில், 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8:30 மணி முதல் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள், முதியவர்கள் சாலையில் அமர்ந்து, வருவாய்த்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ், ஆவடி கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன், ஆவடி துணை கமிஷனர் ஐமான் ஜமால் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிடாமல் மக்கள் தொடர்ந்தனர். மாலை 4:00 மணியளவில், 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.