தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவள்ளூரில் கூடுதல் ரயில் நிறுத்தக்கோரி ஒரு வாரத்தில் 150க்கும் மேல் 'இ - மெயில்'

திருவள்ளூரில் கூடுதல் ரயில் நிறுத்தக்கோரி ஒரு வாரத்தில் 150க்கும் மேல் 'இ - மெயில்'

திருவள்ளூரில் கூடுதல் ரயில் நிறுத்தக்கோரி ஒரு வாரத்தில் 150க்கும் மேல் 'இ - மெயில்'


ADDED : ஜூலை 27, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:திருவள்ளூரில், கூடுதல் ரயில்கள் நிறுத்தக்கோரி, தெற்கு ரயில்வே 150க்கும் மேற்பட்ட இ - மெயில்கள் வந்துள்ளன.

சென்னைக்கு அடுத்த புறநகரில், முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து, தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த வழித்தடத்தில், தினம் 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் செல்கின்றன. ஆனால், நிறுத்தம் இல்லாததால், பயணியர் விரைவு ரயில்களின் சேவையைப் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதையடுத்து, கூடுதல் விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில் பயணியர், தெற்கு ரயில்வேக்கு தொடர்ந்து இ - மெயில் அனுப்பி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 150க்கும் மேற்பட்டோர், தலைமை அலுவலகத்துக்கு இ - மெயில் அனுப்பி உள்ளனர்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட பயணியர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ஜெயபால்ராஜ் கூறியதாவது:

திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் 60 விரைவு ரயில்களில், மங்களூர் மெயில், ஆலப்புழா, காவேரி, திருப்பதி, மும்பை, ஏலகிரி, மைசூர் உள்ளிட்ட 11 விரைவு ரயில்கள் மட்டும் நின்று செல்கின்றன. இது போதாது. கோவை, பெங்களூரு, காச்சிக்குடா, நீலகிரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஒன்பது விரைவு ரயில்கள் நின்று செல்ல அனுமதிக்க கோரி, தெற்கு ரயில்வேக்கு இ - மெயில் அனுப்பி வருகிறோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில், பொது நல சங்கங்கள், பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும், தொடர்நது இ.மெயில் அனுப்ப உள்ளோம். பல்லாயிரக்கணக்கானோரின் தேவையை கருத்தில் வைத்து, திருவள்ளூரில் கூடுதல் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ''திருவள்ளூரில் கூடுதல் விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்குவது குறித்த பயணியரின் இ - மெயில்களை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளோம். கோரிக்கையை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us