/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது நகை கடன் தரும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் திடீர் மாயம்
/
பொது நகை கடன் தரும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் திடீர் மாயம்
பொது நகை கடன் தரும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் திடீர் மாயம்
பொது நகை கடன் தரும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் திடீர் மாயம்
ADDED : ஜூன் 25, 2025 12:31 AM
புழல், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைளுடன் கோல்ட் லோன் நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புழல் லட்சுமிபுரம், பாரதியார் தெரு, முதல் மாடியில் கே.ஜே.கோல்ட் லோன் நிறுவனம் உள்ளது. இதை, அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ், விநாயகம் ஆகியோர் நிர்வகித்து வந்தனர். வில்லிவாக்கத்தை சேர்த்த உகந்தன் தங்கவேலு, 40 என்பவர் மேலாளராகவும் நகை மதிப்பீட்டாளராகவும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிறுவனத்தில் 100 சவரனுக்கு மேல் பலரும் நகை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக அந்த நிறுவனம் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.
வாடிக்கையாளர்கள் மேலாளரை தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை புழல் போலீசார், மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள், தலைமறைவான நகை கடை உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.