ADDED : மார் 06, 2026 06:11 AM

அ நிறம் | அளவு
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, சென்னீர்குப்பத்தில் பெயின்ட் விற்பனை செய்யும் கடை உள்ளது. நேற்று, கடையில் எதிர்பாராதவிதமாக தீ பற்றியதால், கடையில் இருந்து ஊழியர்கள் வெளியேறி காயமின்றி தப்பினர்.
பூந்தமல்லி மற்றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், நுரை மற்றும் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.
தீ விபத்து குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
