ADDED : மார் 04, 2024 01:39 AM
அ நிறம் | அளவு
நந்தம்பாக்கம்:உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் மிண்ட், 24. இவரது நண்பர் விக்ரம், 25. நந்தம்பாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்தில், இருவரும் பெயின்டராக பணி புரிந்தனர்.
நேற்று, அடையாறு ஆற்றங்கரையில் அமர்ந்து இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விக்ரம், காய்கறி வெட்டும் கத்தியால், மிண்டை சரமாரியாக குத்தி கொலை செய்தார். நந்தம்பாக்கம் போலீசார், விக்ரமை கைது செய்தனர்.
