ADDED : ஜூன் 01, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்:கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு, 59; பிரிட்டானியா பிஸ்கட் டெலிவரி வேலை செய்பவர்.
கடந்த 30ம் தேதி, இவரது வீட்டின் அலமாரியில் பையில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி பொருள்கள் மற்றும் 20,000 ரூபாய் திருடு போனது.
சமீபத்தில் வீட்டில் நடந்த பழுது பார்க்கும் பணிக்கு பின்னரே இச்சம்பவம் நடந்ததாக, ரமேஷ்பாபு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட விழுப்புரம், திருவெண்ணைநல்லுாரைச் சேர்ந்த குகன், 35, என்பவரை, கைது செய்தனர்.
விழுப்புரத்தில், அவரிடம் இருந்த 8 சவரன் தங்க நகைகள், 95 கிராம் வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.