/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வரை மிரட்டிய பெயின்டர் கைது
/
முதல்வரை மிரட்டிய பெயின்டர் கைது
ADDED : பிப் 17, 2026 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம், மொபைல் போன் வழியே ஒருவர் பேசி, முதல்வர் ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், மொபைல் போன் எண்ணை வைத்து, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்த கார்த்திகேயன், 49, என்பவர் கொலை மிரட்டல் விடுத்தை கண்டறிந்தனர்.
சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதியில் இருந்த கார்த்திகேயனை கைது செய்த போலீசார், சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் விசாரணையில், மனைவியை பிரிந்து கார்த்திகேயன் வாழ்வதும், கடந்த ஆண்டு இதே போல் தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி, வெளிவந்ததும் தெரிய வந்தது.

