ADDED : மார் 09, 2026 05:31 AM
அ நிறம் | அளவு
குன்றத்துார்: குன்றத்துார் அடுத்த சிறுகளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 30; பெயின்டர்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவருடன் சேர்ந்து, காட்டரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராவூர் பகுதியில், செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று முன் தினம் மாலை குளித்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, சங்கர் நீரில் மூழ்கி பலியானார். சோமங்கலம் போலீசார் உடலை கைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.
