ADDED : ஜூன் 07, 2025 12:28 AM
அ நிறம் | அளவு
சென்னை, ஆரணியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 41; பெயின்டர். வானகரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், பெயின்ட் அடிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
மொட்டை மாடியில் சூரிய ஒளி தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் நின்று பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென கால் இடறி விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த பெயின்டர், சம்பவ இடத்திலேயே பலியானார். வானகரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
