தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு

மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு

மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் உயிரிழப்பு


ADDED : செப் 03, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2025 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம், மாடியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேற்கு அண்ணா நகர், திருமங்கலம் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந்தவர் சிவகுமார், 46; பெயின்டர். திருமணமாகாத இவர், நேற்று மாலை 5:30 மணிக்கு, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அங்கிருந்தோர், இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அவர், ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், இவர் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்றவர் என்பது தெரியவந்தது. மீண்டும் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது துாக்கக் கலக்கத்தில் கீழே விழுந்தாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us