/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சன்ஷேடு' உடைந்து விழுந்து பெயின்டர் பலி
/
'சன்ஷேடு' உடைந்து விழுந்து பெயின்டர் பலி
ADDED : ஜூலை 26, 2025 12:11 AM
தாம்பரம் :சன்ஷேடில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் ஒருவர் உயிரிழந்தார்.
மேற்கு தாம்பரம், ஆயில் மில் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால், 74. இவரது வீட்டில், பெயின்டிங் பணி நடக்கிறது. இப்பணியில், தாமோதரன், பழனி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இதில், தாம்பரம் நடைபாதையில் தங்கி பணிபுரியும் பழனி, 65, என்பவர், நேற்று காலை 'சன்ஷேடு' மேல் நின்று, வர்ணம் பூசிக் கொண்டிருந்தார்.
அப்போது, சன்ே ஷ டு உடைந்து, கீழே விழுந்தார். தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்த பழனியை, அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரியவந்தது.
தாம்பரம் போலீசார் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.