தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீட்டினுள் இறந்து கிடந்த பெயின்டர்

வீட்டினுள் இறந்து கிடந்த பெயின்டர்

வீட்டினுள் இறந்து கிடந்த பெயின்டர்


ADDED : மே 28, 2025 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2025 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரும்பாக்கம்,பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் செந்தில்நாதன், 44; பெயின்டர். இவருக்கு திருமணமாகவில்லை. இவரது தாய் உத்தராதேவி, 80. இருவரும், ஒரே பிளாக்கில், தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.

செந்தில்நாதன் தினமும், தாய் வீட்டில் உணவருந்திவிட்டு, தன் வீட்டில் வந்து தங்குவது வழக்கம். இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு உணவருந்தி, தன் வீட்டை உள்தாழிட்டு படுத்துள்ளார்.

அதன் பின் கதவு திறக்கப்படவில்லை. இரு நாட்களாக மகன் சாப்பிட வராததால், மகனின் வீட்டிற்கு உத்தராதேவி வந்துள்ளார். வீடு உட்புறம் தாழிட்டு இருக்கவே, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்ததில், அவர் சோபாவில் படுத்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

பெரும்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us