தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின் விபத்தில் காயமடைந்த பெயின்டர் உயிரிழப்பு

மின் விபத்தில் காயமடைந்த பெயின்டர் உயிரிழப்பு

மின் விபத்தில் காயமடைந்த பெயின்டர் உயிரிழப்பு


ADDED : பிப் 26, 2024 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி:ஆவடி அடுத்த வீராபுரம், கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ், 25, தனசேகர், 32. இருவரும், திருமுல்லைவாயல், நாகம்மை நகர் ஒன்பதாவது தெருவில் உள்ள சங்கர் என்பவரின் வீட்டில், 22ம் தேதி பெயின்டிங் வேலை செய்து கொண்டிருந்தனர்.

வீட்டின் முதல் தளத்தில் உள்ள மாடியில் பெயின்ட் அடிக்கும்போது, வீட்டின் அருகில் இருந்த உயர் மின்னழுத்த இணைப்பால் ஈர்க்கப்பட்டு, இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தனர்.

இருவரும் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று மதியம் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us