UPDATED : அக் 07, 2026 08:48 PM
ADDED : அக் 07, 2026 07:17 PM
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த முருகதாஸின் மகன் ரோகித், 22. இவர் தனியாக வசித்து வருகிறார். தந்தை முருகதாஸ் மற்றும் ரோஹித்தின் அண்ணன் ஷியாம் கிண்டியில் வசிக்கின்றனர்.
ரோகித், பெயின்டிங் மற்றும் கூலி வேலை செய்து வந்தார். மது போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11:00 மணியளவில் தன் நண்பர் நல்லுசாமியிடம் பேசும்போது, ‛எனக்கு வாழ பிடிக்கவில்லை' எனக்கூறி தன் மொபைல் போனை துாக்கி போட்டு உடைத்துள்ளார்.
மதியம் நல்லுசாமி ரோகித் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ரோகித் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறந்து கிடந்தள்ளார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடம் விரைந்த போலீசார், ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
