/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாட்டியத்தில் 'தசாவதார மூர்த்தி' ஓவியம்
/
நாட்டியத்தில் 'தசாவதார மூர்த்தி' ஓவியம்
ADDED : டிச 16, 2025 06:44 AM

- நமது நிருபர் -: ஸ்ரீதேவி நிருத்யாலயா நாட்டியப் பள்ளி சார்பில், ராகமாலிகா ராகம், ஆதிதா ளத்தில் அமைந்த, 'தசாவதாரம் அஷ்டபதி' நாட்டிய நிகழ்ச்சி, 'பாரத் கலாசார்' சபா சார்பில், தி.நகர் ஒய்.ஜி.பி., அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பங்கேற்ற கலைஞர்கள், பரதநாட்டியம் ஆடிக்கொண்டே, ஓவியம் தீட்டும் புதுமையான முயற்சியை சிறப்புறச் செய்தனர்.
மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்களான மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற் றும் கல்கி ஆகிய அவதாரங்களையும், ஒரு 'போர்ட்ரைட்' ஓவியமாக வரைந்து கலைஞர்கள் அசத்தினர். கால்களில் ஜதி போட்டுக்கொண்டு, கைகளால் அவற்றை வரைந்தனர்.
மொத்தம் 30 நிமிடங்கள் நடந்த இந்த நாட்டிய நிகழ்ச்சியில் , பன்றி முகம், சிங்க முகம், கால் பகு தியில் மீன், பகுதியில் ராமர் வில், பரசுராமர் கோடரி, பலராமர் ஏர்கலப்பை, கல்கி வாள், கூர்ம இடுப்பு மற்றும் தாமரை, சங்கு, சக்கரம், கதாயுதம் என, 'தசாவதார மூர்த்தி' உருவத்தையும் ஓவியமாக வரைந்த னர். இதில், ஸ்ரீதேவி நிருத்யாலயா நாட்டியப் ப ள்ளி நிறுவனர், ஷீலா உன்னிகிருஷ்ணனின் மாணவியர் பைரவி வெங்கடேஷன், மிருதுளா சிவகுமார், மிருணாளினி சிவகுமார், சஞ்ஜனா ரமேஷ், காமேஷ்வரி கணேசன் ஆகியோர், பக்தி பரவசம் பொங்க நாட்டியம் ஆடினர்.
ஜெய தேவர் இயற்றிய, இந்த தசாவதார அஷ்டபதிக்கு, கானகந்தர்வன் ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள் ளார்.
பரதநாட்டிய கலைஞர்களின் இம்முயற்சி, ரசிகர்களின் பாராட்டு மழையை பெற்றது.

