ADDED : ஜன 17, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.ஐ.,க்கு வெட்டு
வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில், பாம் சரவணனை தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது, இன்ஸ்பெக்டர் அம்பேத்கரை அரிவாளால் வெட்டி உள்ளார். தடுக்க முயன்ற எஸ்.ஐ., மணியின் இடது கையில் வெட்டி உள்ளார். போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளையும் வீசியுள்ளார். அது வெடிக்கவில்லை என, கூறப்படுகிறது.
மணி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பாம் சரவணனிடம் இருந்து, நான்கு நாட்டு வெடிகுண்டுகள், 5 கிலோ கஞ்சா, பெரிய வீச்சரிவாள், ஒரு சிறிய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.