/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாவலுாரில் பஞ்சவர்ண குருவி மீட்பு
/
நாவலுாரில் பஞ்சவர்ண குருவி மீட்பு
ADDED : அக் 30, 2025 12:30 AM

சென்னை:  நாவலுாரில் உள்ள தனியார் அலுவலக வளாகத்தில் தவித்த பஞ்சவர்ண குருவி மீட்கப்பட்டது.
சோழிங்கநல்லுார் அடுத்த நாவலுாரில் சில நாட்கள் முன், இமயமலை பகுதியில் வாழும் பஞ்சவர்ண குருவி தென்பட்டது.
பறக்க முடியாமல் தவித்த அதை மீட்ட, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப் பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
நாவலுாரில் ஒரு தனியார் அலுவலகத்தில் ஒரு அரிய வகை பறவை, பறக்க முடியாத நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கிருந்தவர்கள் அந்த பறவை குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை கள பணியாளர்கள் ஒத்துழைப்புடன் பஞ்சவர்ண குருவி மீட்கப்பட்டு, நன்மங்கலம் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது. இமயமலையிலிருந்து நீண்ட துாரம் பறந்து வந்த பறவை, சோர்வடைந்திருந்தது தெரிய வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

