/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குண்டாசில் சிறை சென்றவருக்கு மீண்டும் ஊராட்சி தலைவி அதிகாரம்
/
குண்டாசில் சிறை சென்றவருக்கு மீண்டும் ஊராட்சி தலைவி அதிகாரம்
குண்டாசில் சிறை சென்றவருக்கு மீண்டும் ஊராட்சி தலைவி அதிகாரம்
குண்டாசில் சிறை சென்றவருக்கு மீண்டும் ஊராட்சி தலைவி அதிகாரம்
ADDED : ஆக 13, 2025 05:27 AM

வண்டலுார் : கொலை வழக்கில் குண்டாசில் சிறை சென்ற ஜாமினில் வந்த, வண்டலுார் ஊராட்சி தலைவருக்கு மீண்டும் பதவி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ஊராட்சியில், 2021ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்பவர் வெற்றி பெற்று, ஊராட்சி தலைவராகவும், ஆராமுதன் என்பவர் ஒன்றிய கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த 2024ல், ஊராட்சியில் முத்தமிழ்ச்செல்வியின் முறைகேடுகள், ஊழல்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க ஆராமுதன் தயாரானார். அதே ஆண்டு பிப்., 29ம் தேதி, ஆராமுதன் படுகொலை செய்யப்பட்டார்.
வழக்கில், முதல் குற்றவாளியான முத்தமிழ்ச்செல்வி, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஊராட்சி தலைவருக்கான அதிகாரம் பறிக்கப்பட்டது. ஆனால், பதவி பறிக்கப்படவில்லை.
ஆறு மாத சிறை வாசத்திற்குப் பின், ஜாமினில் வந்த அவருக்கு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மீண்டும் ஊராட்சி தலைவருக்கான அதிகாரத்தை வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் முத்தமிழ்ச்செல்வி, தன் ஆதரவாளர்கள் புடை சூழ வண்டலுார் ஊராட்சி அலுவலகம் வந்து, மீண்டும் பணியை துவங்கினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று வண்டலுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 'கொலை குற்றத்தில் முதல் குற்றவாளியாக அறியப்பட்ட நபர், ஊராட்சி தலைவராக செயல்படும்போது, கோரிக்கை சார்ந்து அவரிடம் செல்ல மக்கள் அச்சப்படுவர்.
இந்த நடவடிக்கையால், ஆளும் அரசின் மீது வண்டலுார் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்' என்றனர்.