sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு இடத்தில் ஊராட்சி தலைவர், அடாவடி! உறவுகளின் 'பக்கா' வீடுகள்;  கல்வீச்சு தாக்குதலால் மிரண்ட அதிகாரிகள்; இடிப்பு கைவிடல்

/

அரசு இடத்தில் ஊராட்சி தலைவர், அடாவடி! உறவுகளின் 'பக்கா' வீடுகள்;  கல்வீச்சு தாக்குதலால் மிரண்ட அதிகாரிகள்; இடிப்பு கைவிடல்

அரசு இடத்தில் ஊராட்சி தலைவர், அடாவடி! உறவுகளின் 'பக்கா' வீடுகள்;  கல்வீச்சு தாக்குதலால் மிரண்ட அதிகாரிகள்; இடிப்பு கைவிடல்

அரசு இடத்தில் ஊராட்சி தலைவர், அடாவடி! உறவுகளின் 'பக்கா' வீடுகள்;  கல்வீச்சு தாக்குதலால் மிரண்ட அதிகாரிகள்; இடிப்பு கைவிடல்

4


UPDATED : பிப் 10, 2026 06:34 AM

ADDED : பிப் 10, 2026 06:00 AM

Google News

UPDATED : பிப் 10, 2026 06:34 AM ADDED : பிப் 10, 2026 06:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர், அகரம்தென் கிராமத்தில், அரசு இடத்தை ஆக்கிரமித்து ஊராட்சி தலைவரும், அவரது தம்பியும் கட்டிய, 'பக்கா' வீடுகளை, நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய் துறையினர் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி தலைவரும், அவரது உறவுகளும் அடாவடியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீது கற்கள், கட்டைகளை வீசியதோடு, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விடுத்ததால், அதிகாரிகள் பாதியில் திரும்பிச் சென்றனர். தாம்பரம் அருகே, சேலையூர் அடுத்த அகரம்தென் பகுதியில், சர்வே எண் - 206/1ல், அரசு தரிசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து, அகரம்தென் ஊராட்சி தலைவரான, தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது சகோதரர் கடை மற்றும் வீடுகளை கட்டியுள்ளதாக, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தானம், 2024ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, 2024ம் ஆண்டு, வருவாய் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன் வீட்டின் ஒரு பகுதியை மட்டும் இடித்து, கணக்கு காட்டினர்.

பாதிக்கப்பட்டோர், தடை உத்தரவு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக, சமூக ஆர்வலர் சந்தானம், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

வாக்குவாதம் வழக்கு விசாரணையின்போது, செங்கல்பட்டு கலெக்டர், தாம்பரம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து, 'நாங்கள் வேலை செய்து விட்டோம்' என, நீதிமன்றத்தில் கணக்கு காட்ட, வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

நேற்று காலை, 100க்கும் மேற்ப்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறை அதிகாரிகள், 'பொக்லைன்' இயந்திரத்துடன் அகரம்தென் பகுதிக்கு சென்றனர்.

ஏற்கனவே, ஒரு பகுதி இடிக்கப்பட்ட நிலையில் உள்ள கட்டடத்தை ஒட்டியுள்ள, மூன்று மாடி கட்டடத்தை, பொக்லைன் இயந்திர உதவியுடன் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அகரம்தென் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு கூடி, வருவாய் துறையினர் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜெகதீஸ்வரனின் உறவினர்கள், மூன்றாவது மாடிக்கு சென்று, கீழே குதிப்பதாகவும், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டினர்.

கல் வீச்சு பின், அங்கு கிடந்த கற்கள், ஓடுகள், கட்டைகளை எடுத்து, கீழே இருந்த அதிகாரிகள் மீது வீசினர். தொடர்ந்து, குப்பைக்கு தீ வைத்து, கீழே வீசினர்.

இதற்கிடையில், அந்த கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்த வருவாய் துறையினர், சிறிது துாரத்தில் உள்ள, பயன்பாட்டில் இல்லாத பழமையான ஊராட்சி கட்டடத்தை இடிக்க சென்றனர். அங்கும் வந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

'ஊராட்சி கட்டடம் உள்ள இடம் நீர்நிலை என்றால், அதை ஒட்டியுள்ள கட்டடங்களையும் இடிக்க வேண்டும்' என, அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். பிரச்னை பெரிதானதை அடுத்து, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் கைவிட்டு கலைந்து சென்றனர்.

மீதமுள்ள கட்டடமும் அகற்றப்படும் நீதிமன்றம் உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பில் இருந்த இரண்டு கடைகள் மற்றும் வீட்டின் வெளிப்பகுதி இடிக்கப்பட்டுள்ளன. பிரச்னை அதிகமானதால், பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ஆக்கிரமிப்பு இடிக்கப்பட்டதாகவே அர்த்தம். நேரம் இருக்கும்போது, எஞ்சிய கட்டடமும் இடிக்கப்படும். - கனிமொழி, தாசில்தார், தாம்பரம்.








      Dinamalar
      Follow us