/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊராட்சி துாய்மை பணியாளர்களே குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
/
ஊராட்சி துாய்மை பணியாளர்களே குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
ஊராட்சி துாய்மை பணியாளர்களே குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
ஊராட்சி துாய்மை பணியாளர்களே குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
ADDED : மே 18, 2025 03:43 AM

சித்தாலப்பாக்கம்:பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், அரசன்கழனி ஊராட்சிகளில், கோவில், பள்ளி, நீர்நிலைகள், சாலை ஓரங்களில் குப்பை நிரம்பியுள்ளது.
வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் வாகனங்களும் இப்பகுதிக்கு வருவதில்லை. குப்பை தொட்டியும் சரிவர வைப்பதில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
குப்பை சேகரிக்கும் வாகனம் செல்லும் நேரங்களில், பெரும்பாலானோர் குப்பையை கொடுப்பதில்லை. மாறாக, வேலைக்கு செல்லும் வழியில் வீசி செல்கின்றனர்.
இந்நிலையில், குப்பையை அகற்ற வேண்டிய சித்தாலப்பாக்கம் துாய்மை பணியாளர்கள், அதை அகற்றாமல், சாலை ஓரத்தில் குவிந்துள்ள குப்பைக்கு தீ வைத்து எரிக்கின்றனர்.
குப்பை அகற்றாமல் இருப்பது புகாரோ அல்லது செய்தியோ வந்தால், உடனடியாக அதை தீ வைத்து எரிப்பது வழக்கமாகி வருகிறது.
எனவே, குப்பையை அகற்றாமல் தீ வைத்து எரிக்கும் சுகாதார பணியாளர்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.