/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருகப்பெருமாள் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்
/
முருகப்பெருமாள் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்
முருகப்பெருமாள் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்
முருகப்பெருமாள் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்
ADDED : ஏப் 11, 2025 11:53 PM

சென்னை, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோவில்களிலும், சிவாலயங்களில் பங்குனி உத்திர திருநாள் விழா, நேற்று விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
சென்னை, வடபழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகத்தினுள் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தெப்பத் திருவிழா
பங்குனி உத்திர விழாவை தொடர்ந்து, இன்று முதல் 14ம் தேதி வரை மூன்று நாட்கள் இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.
இன்று இரவு தெப்பத்தில் வடபழனி முருகன் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.
* குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் கொடி மரம் முன், 110 கிலோ சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகனை, பக்தர்கள் தரிசித்து மொபைல் போன்களின் புகைப்படம் எடுத்து மகிழந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
அதேபோல, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகப்பெருமான் கோவில்களில், பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்தது. இதில், தீர்த்தவாரி, சுவாமி திருக்கல்யாண வைபவங்கள் நடந்தன.