/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூஜை பொருட்களை மட்டும் திருடும் நபரால் புறநகரில் பீதி
/
பூஜை பொருட்களை மட்டும் திருடும் நபரால் புறநகரில் பீதி
பூஜை பொருட்களை மட்டும் திருடும் நபரால் புறநகரில் பீதி
பூஜை பொருட்களை மட்டும் திருடும் நபரால் புறநகரில் பீதி
ADDED : செப் 19, 2025 12:35 AM
பெருங்களத்துார் பெருங்களத்துார், முடிச்சூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், பூஜை பொருட்களை மட்டும் குறிவைத்து திருடும் நபரால், தாம்பரம் கமிஷனரக எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிப்போர் பீதியில் உள்ளனர்.
புதுபெருங்களத்துார், அமுதம் நகரை சேர்ந்தவர் கிருத்திகா, 38. குன்றத்துாரை அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
செப்., 16ம் தேதி காலை, வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இரவு திரும்பி வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, துணி, பாத்திரங்கள் சிதறி கிடந்தன. ஆனால், பூஜை அறையில் இருந்த பித்தளை பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இச்சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், பெருங்களத்துார், முடிச்சூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், பூஜை பொருட்களை மட்டும் குறிவைத்து திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளில், ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர், அந்த வீட்டிற்குள் புகுந்து, பூஜை பொருட்களை மட்டும் திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், மர்ம நபரை கண்டறிவதில் போலீசார் திணறுகின்றனர்.
அதனால், இப்பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, பூஜை பொருள் திருடனை கைது செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.