/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் பாதுகாப்புடன் வந்த கன்டெய்னர் லாரிகளால் பீதி
/
போலீஸ் பாதுகாப்புடன் வந்த கன்டெய்னர் லாரிகளால் பீதி
போலீஸ் பாதுகாப்புடன் வந்த கன்டெய்னர் லாரிகளால் பீதி
போலீஸ் பாதுகாப்புடன் வந்த கன்டெய்னர் லாரிகளால் பீதி
ADDED : பிப் 20, 2025 02:47 AM

திருவொற்றியூர்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வெடிப்பொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் ஏற்றி வந்த, கன்டெய்னர் லாரிகளால், திருவொற்றியூரில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் கான்கார்டு பணிமனைக்கு செல்வதற்காக, வெடி பொருள் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் ஏற்றி வந்த, 20க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள், திருவொற்றியூர் - பகிங்ஹாம் கால்வாய் மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்டு இருந்தன.
இதற்கு, உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பும் போடப்பட்டு இருப்பதால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
இதுகுறித்து, கான்கார்டு பணிமனை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
வெளிநாடுகளில் வெடி பொருட்களுக்கான மூலப்பொருட்கள் தயாரிக்கப்படுவது இல்லை. அதிகப்படியான கழிவுகள், ரசாயனங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதே இதற்கு காரணம்.
இதனால், நம் நாட்டில் புனேயில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் தயாராகும் மூலப் பொருட்களை, வெளிநாடுகள் இறக்குமதி செய்து கொள்கின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, திருவொற்றியூர் கான்கார்டு பணிமனைக்கு, 20க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளில், வெடிப்பொருள்கள் தயாரிபுக்கான மூலப்பொருட்கள் வந்துள்ளன. பணிமனையில் பாதுகாக்கப்படும்.
உரிய அனுமதி கிடைத்ததும், இந்த கன்டெய்னர் லாரிகள், துறைமுகத்திற்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். இது மூலப் பொருட்கள் மட்டுமே என்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.