/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரை கண்டித்து பஞ்., துணை தலைவர் மறியல்
/
போலீசாரை கண்டித்து பஞ்., துணை தலைவர் மறியல்
ADDED : பிப் 13, 2024 12:37 AM
மணலிபுதுநகர், மணலிபுதுநகர் அடுத்த விச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வைதேகி என்பவர் உள்ளார். இவரது கணவர் சுமன், 40; அ.தி.மு.க., பிரமுகர்.
அக்., 2ம் தேதி, விச்சூரில் சுமனை, மூன்று பேர் ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பினர். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சுமன் இறந்தார். இது குறித்து, மணலிபுதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், கொலையில் தொடர்புடையவர்கள் மீது ஐந்து மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி, வைதேகி மற்றும் அவரது குடும்பத்தினர், மணலிபுதுநகர் - பொன்னேரி நெடுஞ்சாலையில், நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணலிபுதுநகர் காவல் ஆய்வாளர் ராஜன், மணலி சரக உதவி கமிஷனர் மகிமை வீரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.