/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாப்பான்சத்திரம் மின்வாரிய பிரிவு அலுவலகம் துவக்கம்
/
பாப்பான்சத்திரம் மின்வாரிய பிரிவு அலுவலகம் துவக்கம்
பாப்பான்சத்திரம் மின்வாரிய பிரிவு அலுவலகம் துவக்கம்
பாப்பான்சத்திரம் மின்வாரிய பிரிவு அலுவலகம் துவக்கம்
ADDED : நவ 04, 2025 12:39 AM
தண்டலம்:  ஸ்ரீபெரும்புதுார் மின் வாரிய கோட்டத்தில், நிர்வாக காரணங்களுக்காகவும், மின் நுகர்வோர் வசதிக்காகவும், தண்டலம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, சில பகுதிகளை பிரித்து, பாப்பான்சத்திரம் பகுதியில் உதவி பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பாப்பான்சத்திரம் புதிய பிரிவு அலுவலகத்திற்கு, குறியீட்டு எண்: 597 ஒதுக்கப்பட்டுள்ளது.  பாப்பான்சத்திரம் உதவி பொறியாளர் அலுவலகத்தின் கீழ், பழஞ்சூர், பாப்பான்சத்திரம், மாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில், குளக்கரை தெரு, சாய் பாபா கோவில், எலிம்ஸ் நகர், பாடசாலை தெரு, காசி விஸ்வநாதர் கோவில், கன்னடபாளையம், கே.ஜி., அப்பார்ட்மென்ட், குத்தம்பாக்கம் சாலை, விஜயசாந்தி அப்பார்ட்மென்ட், செட்டிபேடு ஆகிய பகுதிகள் அடங்கும்.
இதற்கு, தற்போது தண்டலம், அய்யப்பா நகர், குளக்கரை தெருவில் உள்ள தண்டலம் மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக அலுவலகம் செயல்படுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் அந்த அலுவலகத்தை, நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸாப் மூலமாகவோ தொடர்பு கொண்டு, தங்களது புதிய மின் இணைப்பு எண்களின் விபரங்களை அறிந்து கொள்ளலாம் என, மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். தற்காலிக தொலைபேசி எண்கள்: 95005 30128, 85319 12375.

