ADDED : மார் 12, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
பம்மல்: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம், அதற்கான முன்னேற் பாடுகளை தீவிரப் படுத்தியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக, வெளி மாநிலங்களில் இருந்து துணை ராணுவப் படையினர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். பல்லாவரம் சட்ட சபை தொகுதிக்கு, 90 துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துணை ராணுவ படையினர் - போலீசார் இணைந்து, நேற்று மாலை, அனகாபுத்துாரில் 2 கி.மீ., துாரத்திற்கு, கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இதில், 50 போலீசார் பங்கேற்று, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
