ADDED : மார் 25, 2026 06:29 PM

அ நிறம் | அளவு
வளசரவாக்கம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மதுரவாயல் தொகுதியில் நேற்று, துணை ராணுவ படையினரின் பேரணி நடந்தது.
தமிழகத்தில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. அதன்படி, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, துணை ராணுவ படையினர் வந்துள்ளனர்.
இந்நிலையில், மதுரவாயல் தொகுதியில், பாதுகாப்பான முறையில் அமைதியான ஓட்டளிப்பை உறுதி செய்யும் வகையில், வளசரவாக்கம் காந்தி சாலை, ராமாபுரம் வழியாக, வளசரவாக்கம் மண்டல அலுவலகம் வரை, துணை ராணுவ பேரணி நடந்தது. துணை ராணுவ வீரர்களுடன், போலீசாரும் பங்கேற்றனர்.
