/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரங்கிமலை கன்டோன்மென்ட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - படம் வேண்டாம்
/
பரங்கிமலை கன்டோன்மென்ட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - படம் வேண்டாம்
பரங்கிமலை கன்டோன்மென்ட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - படம் வேண்டாம்
பரங்கிமலை கன்டோன்மென்ட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - படம் வேண்டாம்
ADDED : ஏப் 17, 2025 12:19 AM

பரங்கிமலை, பரங்கிமலை கன்டோன்மென்ட் நிர்வாகம், புனேவில் செயல்படும் அதன் இயக்குனர் அலுவலகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து, பரங்கிமலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பரங்கிமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, சங்க தலைவர் நடராஜன் கூறியதாவது:
தமிழக அரசின் ஒரு நபர் குழுவால், 2010ல் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வை, கன்டோன்மென்ட் நிர்வாகம், தொழிலாளர்களுக்கு இதுவரை அமல்படுத்தவில்லை. இதற்கான கோப்பு, புனேவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
சுகாதார கண்காணிப்பாளர் ஊதியம் சம்பந்தமான கோப்பு, 2017ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021ல் போராட்டம் நடத்தப்பட்டது.
கடந்த, 2022ல் எம்.பி.,யாக இருந்த சுப்புராயன் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 'கோப்புகள் மீது உரிய காலத்திற்குள் ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
ஆனால், தற்போது வரை கன்டோன்மென்ட் ஊழியர்களின் ஊதிய உயர்வு, பென்ஷன் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. கன்டோன்மென்ட் நிர்வாகம், ஊழியர்களுக்கான சலுகைகளை முறையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.