தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பரந்துார் டி.ஆர்.ஓ., மாற்றம்

பரந்துார் டி.ஆர்.ஓ., மாற்றம்

பரந்துார் டி.ஆர்.ஓ., மாற்றம்


ADDED : அக் 09, 2024 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2024 12:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றுவட்டார பகுதிகளில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

விமான நிலையம் அமைக்க, 3,774 ஏக்கர் தனியார் நிலங்களும், 1,972 ஏக்கர் அரசு நிலங்களையும் தமிழக அரசு கையகப்படுத்த உள்ளது.

நில எடுப்பு பணிகளை, வருவாய் துறை மேற்கொண்டு வரும் நிலையில், 3 மாவட்ட வருவாய் அலுவலர்களின்கீழ், 24 யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்களில், 3வது டிவிஷனின் மாவட்ட வருவாய் அலுவலராக, பேபி இந்திரா என்பவர் பணியாற்றி வந்தார்.

அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக, மதுரையில் உள்ள மாநில வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல அலுவலரான அருண்சத்யா என்பவரை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us