/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவி இறப்பு விவகாரம் பெற்றோர் போலீசில் புகார்
/
மாணவி இறப்பு விவகாரம் பெற்றோர் போலீசில் புகார்
ADDED : மார் 27, 2025 12:23 AM
அண்ணா நகர், மார்ச் 27--
சேத்துப்பட்டு, 'சி' பிளாக், ஓசான் குளத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 40. இவர் நேற்று, அண்ணா நகர் போலீசில் அளித்த புகார்:
என் மகள் பாரதி, அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லுாரியில், 'பி காம்' முதலாம் ஆண்டு படித்தார். கடந்த பிப்., 10ல், கல்லுாரியிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
அவரை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், கல்லுாரி நிர்வாகம் அலட்சியம் காட்டியது. தாமதமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மகள் இறந்தாக கூறியுள்ளனர்.
என் மகளின் இறப்புக்கு காரணமான கல்லுாரி நிர்வாகம்மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
அதேபோல், 'மாணவிக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. பெற்றோர் சரிவர கவனிக்கவில்லை. இறப்பை காரணம் காட்டி இழப்பீடு கேட்கின்றனர்' என, கல்லுாரி நிர்வாகம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இருதரப்பில் புகாரை பெற்று, அண்ணா நகர் போலீசார் விசாரிகின்றனர்.