/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்லிமென்ட் நிலைக்குழுவினர் கரசங்கால் ஊராட்சியில் ஆய்வு
/
பார்லிமென்ட் நிலைக்குழுவினர் கரசங்கால் ஊராட்சியில் ஆய்வு
பார்லிமென்ட் நிலைக்குழுவினர் கரசங்கால் ஊராட்சியில் ஆய்வு
பார்லிமென்ட் நிலைக்குழுவினர் கரசங்கால் ஊராட்சியில் ஆய்வு
ADDED : ஜன 18, 2025 12:30 AM

குன்றத்துார், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், கரசங்கால் ஊராட்சியில், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது.
இங்கு, ஊரக வளர்ச்சி துறை சார்பில், 100 நாள் வேலை எனும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் உற்பத்தி, மண்புழு உரம், இயற்கை உரம் தயாரித்தல், குளம் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்களை அரைத்தல் உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணிகளை, பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் சப்தகிரி சங்கர் உலாகா தலைமையில், தமிழகத்தைச் சேர்ந்த வைகோ, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஜூகால் கிஷோர், ஒடிசாவை சேர்ந்த நாபா சரண் மஜ்ஹி உட்பட 11 பேர் எம்.பி., குழுவினர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு நடக்கும் பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்து, வருகை பதிவேடை பார்வையிட்டனர். வருகை பதிவேடில் எஸ்.டி., பழங்குடி பிரிவினருக்கு பணி குறைவாக வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
மேலும், அங்கு அமைக்கப்பட்ட குளம், புதிதாக தோண்டப்பட்டது போல் உள்ளதாக சந்தேகம் எழுப்பினர்.
அதற்கு, குளம் தோண்டும் பணி நடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரத்தை, அதிகாரிகள் காண்பித்தனர்.