/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஐ.ஆர்., ஆலோசனை கூட்டத்தில் கட்சியினர் - அதிகாரிகள் வாக்குவாதம்
/
எஸ்.ஐ.ஆர்., ஆலோசனை கூட்டத்தில் கட்சியினர் - அதிகாரிகள் வாக்குவாதம்
எஸ்.ஐ.ஆர்., ஆலோசனை கூட்டத்தில் கட்சியினர் - அதிகாரிகள் வாக்குவாதம்
எஸ்.ஐ.ஆர்., ஆலோசனை கூட்டத்தில் கட்சியினர் - அதிகாரிகள் வாக்குவாதம்
ADDED : நவ 19, 2025 04:23 AM

சென்னை: எஸ் .ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கான முகாம், சென்னை முழுதும் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. பல இடங்களில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வராதது, கட்சியினர், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் உள்ளிட்டவற்றால், விண்ணப்பம் பதியும் பணி மந்தமாக நடந்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்காக, வீடு, வீடாக வழங்கப்படும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில், வாக்காளர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. முறையான வழிகாட்டுதல் இல்லாததால், அவர்கள் தவறாக பூர்த்தி செய்துள்ளனர்.
எனவே, வாக்காளர்களுக்கு வழிகாட்டும் வகையில், 947 ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் உதவி மையங்களை, சென்னை மாவட்ட தேர்தல் பிரிவு ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, வரும் 25ம் தேதி வரை, எட்டு நாட்கள் நடக்கும் வாக்காளர் உதவி மையங்களில் காலை 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும், மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் கட்சிகளின் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் பல இடங்களில் நடந்தது.
வேளச்சேரியில் நடந்த முகாமில், மாநகராட்சி அதிகாரிகள், விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யும் வகையில் சில ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது, விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தி.மு.க., - அ.தி.மு.க முகவர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பினர். ஒருகட்டத்தில், யார் அதிகம் கேள்வி எழுப்புவது என, இரு கட்சியினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.
அதில் அ.தி.மு.க.,வினர் மற்றும் தி.மு.க.,வினர் மேடை அருகில் கூட்டமாக சுற்றி நின்று, அதிகாரிகளை பதில் கூற விடாமல் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். அதிகாரிகளும் வாக்குவாதம் செய்தனர். அங்கு, கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது.
தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, கூட்டத்தை நடத்த வைத்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சிட்கோ நகர், பாபா நகர் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்கு வரும் அலுவலர்கள், பூர்த்தி செய்த படிவத்துடன் ஆதார் நகலை இணைக்க வேண்டும் என, வாக்காளர்களை கட்டாயப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல், ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம், அர்த்துாண் சாலையில் உள்ள சென்னை உருது தொடக்கப் பள்ளியில் நடந்தது.
கா லை 10:00 மணிக்கு வரவேண்டிய அதிகாரிகள், ஒரு மணி நேரம் கழித்து காலை 11:15 மணிக்கு தாமதமாக வந்தனர். இதனால் வாக்காளர்களான முதியவர்கள், காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சில வாக்காளர்கள், வீட்டிற்கு திரும்பச் சென்றனர்.
சில இடங்களில், முகாம் நடப்பது குறித்து தெரியாததால், ஓரிரு வாக்காளர்கள் மட்டுமே வந்தனர். அதேபோல், முகாமிற்கு பந்தல் போன்ற நிழற்குடை வசதி ஏற்படுத்தி தராததால், வாக்காளர் படிவங்கள் லே சாக மழையில் நனைந்தன.
வரும் நாங்களில், இப்பிரச்னை ஏற்படாமல் இருக்க, பந்தல் அல்லது வகுப்பறையை ஒதுக்கி தர வேண்டும் என, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

