/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
/
விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
ADDED : அக் 25, 2025 04:58 AM
சென்னை: இலங்கை பறக்க இருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும், 'இண்டிகோ' விமானம், நேற்று முற்பகல் 11:30 மணிக்கு, புறப்பட தயாரானது; இதில் 162 பயணியர் இருந்தனர்.
விமானம் 'ரன்வே' எனும் ஓடு பாதையில் ஓடுவதற்கு தயாராக இருந்தபோது, விமானத்தின் அவசர கால கதவு, திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது. அதிர்ச்சியடைந்த விமானி, உடனடியாக பணிப்பெண்களிடம் விசாரிக்க சொன்னார்.
அவசரகால கதவு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த லட்சுமணன், 45 என்பவர் என தெரிய வந்தது.
அவருடைய நண்பர்கள் என ஏழு பேர், குழுவாக சுற்றுலா செல்ல இருந்தது தெரிய வந்தது. 'எதற்காக அவசர கால கதவை திறக்க முயன்றீர்கள்' என பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டதற்கு, தெரியாமல் பட்டனை அழுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவருடைய பயணத்தை ரத்து செய்ததோடு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, விமானம் அரை மணி நேரம் தாமதமாக, மற்ற 161 பயணியருடன், பகல் 12:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.

