தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பயணியர் இல்லாத விரைவு ரயில் தடம் புரண்டது

பயணியர் இல்லாத விரைவு ரயில் தடம் புரண்டது

பயணியர் இல்லாத விரைவு ரயில் தடம் புரண்டது


ADDED : நவ 26, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பேசின்பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் இருந்து காலியாக புறப்பட்ட சப்தகிரி விரைவு ரயில், இன்று (நவ.,26) தடம் புரண்டது.

பேசின்பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் இருந்து, சப்தகிரி விரைவு ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி, இன்று மாலை 5:00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை 5:30 மணிக்கு, பெங்களூரு புறப்பட்டு செல்லும்.

இந்நிலையில், பணிமனையில் இருந்து காலியாக எடுத்துச் சென்ற ரயிலின் இன்ஜின் பகுதி சக்கரம், தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. ரயில்வே ஊழியர்கள் 20 நிமிடங்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு, சக்கரங்களை தண்டவாளத்தில் நிலைநிறுத்தினர். இதனால் பெங்களூருக்கு விரைவு ரயில், 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டது சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us