/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் லவுஞ்ச் பகுதியை உபயோகிக்க முடியவில்லை என பயணியர் குற்றச்சாட்டு

ADDED : ஜன 27, 2025 02:10 AM
சென்னை:சென்னை விமான நிலையத்தில் உள்ள முனையங்களில், பயணியர் வசதிக்காக, 'லவுஞ்ச்' பகுதி உள்ளது. இங்கு இலவச வைபை, உணவகம், சார்ஜிங் வசதி  உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். தகுதியான பயணியர், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வசதிகளை பெறலாம்.
விமான நிறுவனங்களும் முன்னுரிமை அளித்து, பார்கோட் வடிவில் இதற்கான அனுமதி சீட்டை வழங்கும். இவற்றை ஸ்கேன் செய்து, பயணியர் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பெறப்படும், பார்கோட் வாயிலாக, லவுஞ்ச் பகுதியில் அடிக்கடி பயன்படுத்த முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பயணி ஒருவர் சமூக வலைதளத்தில், 'எங்களிடம் முறையான அனுமதி இருந்தும், லவுஞ்ச் பகுதியை பயன்படுத்த முடியவில்லை. அங்குகள் பணியாளர்களிடம் கேட்டால், உங்களால் பயன்படுத்த முடியாது என்கின்றனர். இது மூன்றாவது முறை' என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு, 'குறைகளை உரிய நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம். போர்டிங் பாஸில் உள்ள பெயரில் பிழை ஏற்பட்டிருந்தாலும், இது போன்று நடக்கும்' என,  பதிலளித்துள்ள விமான நிலைய அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.