sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்கும் பயணியரால் உயிர்பலி அபாயம்

/

 ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்கும் பயணியரால் உயிர்பலி அபாயம்

 ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்கும் பயணியரால் உயிர்பலி அபாயம்

 ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்கும் பயணியரால் உயிர்பலி அபாயம்


ADDED : பிப் 10, 2026 06:20 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடக்கும் பயணியர், அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். உயிரிழப்பு அசம்பாவிதங்களை தடுக்க, ரயில்வே போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

ஆவடி ரயில் நிலையத்தை பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என, தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆவடி மார்க்கமாக, பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 285 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிக்கேற்ப, ஆவடி ரயில் நிலையத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பில் 46 படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. அது செங்குத்தாக இருப்பதால், முதியோர், கர்ப்பிணியர், குழந்தைகள் ஏறி, இறங்க சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து, 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'எஸ்கலேட்டர்' எனும் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது.

முதல் மற்றும் நான்காவது நடைமேடையில் உள்ள 'எஸ்கலேட்டர்' மட்டும், தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இரண்டாவது நடைமேடையில் 'எஸ்கலேட்டர்' பணி நடக்கிறது. நடைமேடை, 'எஸ்கலேட்டர்'கள் இருந்தும், தண்டவாளத்தை கடப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ரயில் நிறுத்தப்பட்டிருந்தால், ஆபத்தை உணராமல் ரயிலுக்கு அடியில் குனிந்து செல்வது தொடர்ந்து நடக்கிறது.

இது சட்டப்படி குற்றமாகும். எனவே, இதற்கு தீர்வு காண கூடுதல் ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, மேம்பாலம், எஸ்கலேட்டரை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us