/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படுமோசமான பொது கழிப்பறை சீரமைக்க பயணியர் கோரிக்கை
/
படுமோசமான பொது கழிப்பறை சீரமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : அக் 06, 2025 03:02 AM
திருவொற்றியூர்: பொது கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, மாநகராட்சி வணிக வளாகம் செயல்படுகிறது.
தினமும் இங்கு திரளானோர் வந்து செல்வதால், அவர்களது பயன்பாட்டிற்காக, வளாகத்திலேயே பெண்களுக்கான கழிப்பறை ஒன்று, ஆண்களுக்காக இரண்டு கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, வளாகத்தின் உள்ளே இருப்பதால், யாருக்கும் தெரிவதில்லை.
பகுதிமக்களின் நலனை கருத்தில் வைத்து, எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே, சில மாதங்களுக்கு முன், ஆண்கள், பெண்களுக்கு என, தலா ஒரு சிறுநீர் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.
ஆனால், ஒரு சில மாதங்களிலே, தண்ணீர் பற்றாக்குறை, பயன்படுத்தப்படும் தண்ணீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவது, சமூக விரோதிகளால் கழிப்பகம் சேதமடைவது என, பல பிரச்னைகளால், தற்போது, படுமோசமாக பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, செயல் படாமல் இருக்கும் சிறுநீர் கழிப்பறையை, சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.