/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயிலில் குவியும் பயணியர் கூடுதல் பெட்டி இணைக்க கோரிக்கை
/
மெட்ரோ ரயிலில் குவியும் பயணியர் கூடுதல் பெட்டி இணைக்க கோரிக்கை
மெட்ரோ ரயிலில் குவியும் பயணியர் கூடுதல் பெட்டி இணைக்க கோரிக்கை
மெட்ரோ ரயிலில் குவியும் பயணியர் கூடுதல் பெட்டி இணைக்க கோரிக்கை
ADDED : ஏப் 10, 2025 12:36 AM
சென்னை,
சென்னையில், தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்திற்கு, தலா நான்கு பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். ஆனால், பயணியர் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, மெட்ரோ ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:
அலுவலக நேரங்களில், மெட்ரோ ரயில்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் அடிக்கடி மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் நடைமேடைகள் போதிய அளவில் இருக்கின்றன. எனவே, மெட்ரோ ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
28 புது ரயில்கள்
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
வரும் ஆண்டுகளில் பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், ஆறு பெட்டிகள் அல்லது கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 28 மெட்ரோ ரயில்கள் வாங்க கடன் வசதிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடுத்கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்த மெட்ரோ ரயில்களை தயாரித்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.