/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் ஓட்டுநர்களுக்கு பயணியர் பாராட்டு
/
ரயில் ஓட்டுநர்களுக்கு பயணியர் பாராட்டு
ADDED : ஜூன் 01, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,சென்னை ரயில் கோட்டத்தில் பணியாற்றி வந்த ரயில் ஓட்டுநர்கள் கோபிநாத், ரவிக்குமார், நாயர், வல்சாராஜன், ஸ்ரீதரன் ஆகியோர், நேற்று பணி ஓய்வு பெற்றனர்.
தங்கள் கடைசி பணி நாளான நேற்று, அவர்கள் இயக்கிய வந்த ரயில்களுக்கு அலங்காரம் செய்து இயக்கப்பட்டது. பல்வேறு நகரங்களில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் வந்ததுடன், ஓட்டுநர்களின் பெயரை குறிப்பிட்டு, ஓய்வு பெறுவதும் அறிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்த ரயில் பயணியர் ஓட்டுநர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ரயில் ஓட்டுநர்கள் பலர், அவர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.