/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாங்குழியான பஸ் நிலையம் சீரமைக்க பயணியர் வேண்டுகோள்
/
பல்லாங்குழியான பஸ் நிலையம் சீரமைக்க பயணியர் வேண்டுகோள்
பல்லாங்குழியான பஸ் நிலையம் சீரமைக்க பயணியர் வேண்டுகோள்
பல்லாங்குழியான பஸ் நிலையம் சீரமைக்க பயணியர் வேண்டுகோள்
ADDED : ஜன 26, 2024 12:42 AM
திருவொற்றியூர், பல்லாங்குழியாக காட்சியளிக்கும் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
எண்ணுார் பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, வள்ளலார் நகர், எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினசரி, 53 பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பேருந்துகளை நிறுத்தும் நிலைய வளாகம் முறையான பராமரிப்பின்றி, கான்கிரீட் சாலை பெயர்ந்து, பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது.
தவிர, காத்திருப்பு இருக்கைகளும் சேதமடைந்துள்ளன. மழைகாலங்களில், பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி, பள்ளம் மேடு தெரியாமல், பயணியர் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
அதை தடுக்க, பயணியர் வெளியே நின்று பேருந்தில் ஏற முயல்வதால், தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.
குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் முறையாக இல்லாததால், பேருந்து பயணியர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வரும் எண்ணுார் பேருந்து நிலைய வளாகத்தை, உடனடியாக சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

