தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஒரே நாளில் 162 பஸ்கள் இயக்கம் நிறுத்தியதால் பயணியர் பரிதவிப்பு

 ஒரே நாளில் 162 பஸ்கள் இயக்கம் நிறுத்தியதால் பயணியர் பரிதவிப்பு

 ஒரே நாளில் 162 பஸ்கள் இயக்கம் நிறுத்தியதால் பயணியர் பரிதவிப்பு

1


UPDATED : ஜூன் 25, 2026 05:10 AM

ADDED : ஜூன் 25, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2026 05:10 AM ADDED : ஜூன் 25, 2026 01:54 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை காட்டி, 162 பேருந்துகள் நேற்று இயக்கப்படவில்லை. இதனால், பேருந்து சேவை போதிய அளவில் கிடைக்காமல், பயணியர் அவதிப்பட்டனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எனும் எம்.டி.சி.,யில், 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் 3,454 பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் என, மாநகர போக்குவரத்து கழகத்தின் எல்லை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், பணியாட்கள் பற்றாக்குறையால் போதிய அளவில் பேருந்துகளை இயக்காத நிலை உள்ளது.



இந்நிலையில், நேற்று வழக்கமாக செல்ல வேண்டிய பேருந்துகளில் 162 இயக்கப்படவில்லை. இதனால், தி.நகர், அண்ணா நகர் உட்பட பல வழித்தடங்களில் பேருந்துகள் கிடைக்காமல் பயணியர் தவித்தனர்.

இது குறித்து ஓட்டுநர், நடத்துநர்கள் கூறியதாவது:

மாநகர பேருந்துகளை இயக்காமல் இருப்பதற்கு ஆட்கள் பற்றாக்குறை மட்டுமே காரணம் அல்ல; உதிரி பொருட்கள், டீசல் தட்டுப்பாடு போன்ற காரணங்களும் உள்ளன.

சில பணிமனைகளில் ஆட்கள் இருந்தும், பணி வழங்க மறுக்கப்படுகிறது. ஆனால், பேருந்துகளை இயக்காததற்கு ஓட்டுநர் பற்றாக்குறை என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று குறைக்கப்பட்ட 162 பேருந்துகளில் பெரும்பாலும் சாதாரண கட்டண பேருந்துகள் தான்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேருந்துகளில் 'ரீல்ஸ்'

வாலிபர்கள் அட்டகாசம்



மாநகர பேருந்துகளில் வாலிபர்கள் சிலர், பயணியருக்கு இடையூறாக 'ரீல்ஸ்' எடுத்து அட்டகாசம் செய்து வருகின்றனர். குறிப்பாக, எண்ணுாரில் இருந்து ராயபுரம்; ராயபுரத்தில் இருந்து திருவான்மியூர் செல்லும் மாநகர பேருந்துகளில், மொபைல் போனில் ரீல்ஸ் எடுப்பதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இதை தட்டிக் கேட்கும் நடத்துநர்கள் மற்றும் பயணியருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். போலீசார் ஆய்வு செய்து, ரீல்ஸ் எடுத்து அடாவடி செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us