ADDED : மார் 18, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
சேலையூர்: சேலையூர், சுந்தரம் காலனி, 1வது தெரு வை சேர்ந்தவர் ராஜா, 47. அப்பகுதியில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர், ராஜாவின் சட்டையை பிடித்து இழுத்து தகராறு செய்து, அவரின் மொபைல் போனை பிடுங்கி உடைத்தனர்.
பின், சட்டை பையில் இருந்த 1,000 ரூபாயை பறித்துக்கொண்டு, அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
